கோவில்பட்டியில் கைப்பந்து போட்டி
கோவில்பட்டியில் கைப்பந்து போட்டி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார்-மாரியம்மாள் கல்லூரியும், கிழக்கு போலீஸ் நிலையமும் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கைப்பந்து போட்டியை நடத்தின. போட்டியை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சந்திரன் வரவேற்று பேசினார். பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி செயலாளர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் ஆர். செல்வராஜ் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கோப்பைகளை பரிசளித்தார்.
முதல் பரிசை கோவில்பட்டி வாரியர்ஸ் அணியும், 2-வது பரிசை எஸ். எஸ். துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரி அணியும், 3-வது பரிசை தமிழ்நாடு போலீஸ் அணியும் பெற்றன. உதவி பேராசிரியர் ஜெயசிவா நன்றி கூறினார்.