கோவில்பட்டியில்பொங்கல் பானை விற்பனை அமோகம்
கோவில்பட்டியில் பொங்கல் பானை விற்பனை அமோகமாக நடந்துவருகிறது.
கோவில்பட்டி:
பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் ஆண்டுதோறும் புதிதாக பொங்கல் பானை, அடுப்பு, பொங்கல் கட்டிகள், மற்றும் பொங்கல் பொருட்களை வாங்குவது வழக்கம். இந்த வகையில் கோவில்பட்டி நகரில் பொங்கல் பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கோவில்பட்டி கடைக்காரத் தெருவில் மானாமதுரை கூஜா, பொங்கல் மண் பானைகள், பொங்கல் கட்டிகள், அடுப்புகள் போன்றவை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இவற்றை பெண்கள் ஆர்வமுடன் வந்து வாங்கி செல்வதாக கடைக்காரர் தெரிவித்தார்.