கோவில்பட்டியில் மொபட் திருட்டு

கோவில்பட்டியில் மொபட் டை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2023-01-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பாரதி நகர் முத்துமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் மனைவி கற்பகவல்லி (வயது 36). இவர் சம்பவத்தன்று காலையில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். முன்பு ெமாபட்டை நிறுத்திவிட்டு, விளாத்திகுளத்திற்கு பஸ்ஸில் சென்று விட்டு மாலையில் திரும்பி வந்துள்ளார். அதற்குள் மர்மநபர் ெமாபட்டை திருடி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்