கோவில்பட்டியில் கார்த்திகை விளக்கு விற்பனை

கோவில்பட்டியில் கார்த்திகை விளக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

Update: 2022-11-25 18:45 GMT

கோவில்பட்டி:

திருக்கார்த்திகை திருநாள் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் ேததி கொண்டாடப்படுகிறது. இத்திருநாளை முன்னிட்டு வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இத்திருநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் எட்டயபுரம் ரோடு, செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில், கிருஷ்ணன் கோவில்பகுதி, மார்க்கெட் ரோடு, மெயின் ரோடு பகுதிகளில் கார்த்திகை விளக்கு விற்பனை தொடங்கி உள்ளது.

விதவிதமான விளக்குகளை குவித்து வைத்து வியாபாகள் விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் விளக்குகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்