கோவில்பட்டியில் வாலிபரிடம் நகை, பணத்தை வழிப்பறி செய்தவர் சிக்கினார்

கோவில்பட்டியில் வாலிபரிடம் நகை, பணத்தை வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-11 18:45 GMT

கோவில்பட்டி(கிழக்கு):

கோவில்பட்டியில் மோட்டார் ைசக்கிளில் சென்ற வாலிபரிடம் நகை, பணத்தை வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

வாலிபரிடம் வழிப்பறி

கோவில்பட்டி படர்ந்தபுளி தோணுகால் பகுதியை ேசர்ந்த கிருஷ்ணசாமி மகன் அய்யனார்(வயது 28). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வேலாயுதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அந்த பகுதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுவன் அவரிடம் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளான். கோவில்பட்டி மூப்பன்பட்டி பாலம் அருகில் அந்த சிறுவனை அவர் இறக்கி விட்டுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்கள் சிறுவனுடன் சேர்ந்து கொண்டு அவரிடம் இருந்த நகை, பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளனர். தரமறுத்த அவரைதாக்கி, 3 பவுன் சங்கிலி, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு அந்த 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் மேற்பார்வையில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கிங்ஸ்லி தேவ்ஆனந்த் மற்றும் கிழக்கு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருடர் சிக்கினார்

இதில், தூத்துக்குடி தபால்தந்தி காலனி மாடசாமி மகன் மகாராஜாவும்(24), அவரது கூட்டாளிகளுடன் ேசர்ந்த அய்யனாரிடம் நகை, பணத்தை வழிப்பறி ெசய்தது தெரிய வந்தது. மேலும் மகாராஜா தற்போது கஞ்சா வழக்கில் விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டி போலீசாரால் கைது ெசய்யப்பட்டு, விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கிழக்கு போலீசார் விருதுநகர் மாவட்ட சிறைக்கு சென்று, அவரை கைது ெசய்வதற்கான ஆவணத்தை அதிகாரிகளிடம் வழங்கினர். மேலும், அவரை போலீசார் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 நீதிபதி உத்தரவுப்படி காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 3 பவுன் சங்கிலி, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்