கோவில்பட்டயில் மினிபஸ் மோதி டிரைவர் பலி

கோவில்பட்டயில் மினிபஸ் மோதி டிரைவர் பலியானார்

Update: 2022-11-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் மலையரசன் (வயது 43). இவர் குச்சி கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி இலுப்பையூரணி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மினி பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சென்று பலியான மலையரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். விபத்து தொடர்பாக மினி பஸ் டிரைவர் குப்பணாபுரத்தைச் சேர்ந்த ராமர் மகன் கதிரேசன் (வயது 25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்