கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம்

கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-19 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் ஆதித்தமிழர் கட்சியினர் திரண்டு வந்தனர். அந்த அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கட்சி மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார்.

கோரிக்கைகள்

கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு தாலுகாக்களுக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி, தீத்தாம்பட்டி, அச்சன்குளம், செவல்பட்டி, கொ. தீத்தாம்பட்டி, புங்கவர் நத்தம், காமநாயக்கன்பட்டி, படந்தபுளி, துரைசாமிபுரம் ஆகிய கிராமங்களில் வாழும் வீட்டு மனை இல்லாத அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, கடந்த ஜனவரி 2-ந் தேதி மாவட்ட கலெக்டர் குறைதீர்க்கும் நாளில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலந்து கொண்டவர்கள்

இப்போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முத்துச்சாமி மாவட்ட நிதி செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருந்ததி சந்திரன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் காளிமுத்து, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கயத்தாறு ஒன்றிய பொறுப்பாளர் ராஜ் மற்றும் ஏராளமான அருந்ததியர் சமுதாய மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.கோவில்பட்டி, ஜூன்.20-


Tags:    

மேலும் செய்திகள்