கோத்தகிரியில் பெண் தவறவிட்ட பணப்பையை போலீசில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு

கோத்தகிரியில் பெண் தவறவிட்ட பணப்பையை போலீசில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு

Update: 2023-04-11 12:51 GMT

கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் தேவன் (வயது 13) மற்றும் முருகேஷ் என்பவரது மகன் சரண் (வயது 10). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று மாலை கடைவீதி வழியாக சென்று கொண்டிருக்கும் போது அங்கு ஒரு பணப்பை கீழே கிடப்பதைக் கண்டனர். அதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருப்பத்தைக் கண்ட அவர்கள் நேராக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று அந்த பணப்பையை சப்- இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அவர் அதை சோதனை செய்த போது அதில் 1,500 ரூபாய், ஸ்ரீலங்கா நாட்டின் விசா, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த பணப்பை கடைவீதி பகுதியை சேர்ந்த சுருதி என்பவருக்கு சொந்தமானதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதில் இருந்த முகவரியை வைத்து சம்பந்தபட்டவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர் அங்கு வந்தார். சப்- இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்கள் முன்னிலையில் அந்தப் பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தார். மேலும் போலீசார் அனைவரும் சிறுவர்களை பாராட்டி ஊக்குவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்