கொடுமுடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
கொடுமுடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு போனது.
கொடுமுடி
கொடுமுடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர் அலி (வயது 28). தொழிலாளி. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் தனது மனைவியுடன் தாராபுரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டின் உள்ளே சென்று பீரோவை பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டு, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.