கொடைக்கானலில்மாசடைந்து வரும் கூக்கால் ஏரி

கொடைக்கானலில் கூக்கால் ஏரி மாசடைந்து வருகிறது.

Update: 2023-02-12 18:45 GMT


கொடைக்கானல் மேல்மலை பகுதியான கூக்கால் கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் கூக்கால் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாக உள்ளதால், தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து ஏரியை கண்டு ரசிக்கின்றனர். மேலும் ஏரியினை சுற்றியுள்ள புல்தரைகளில் அமர்ந்து இயற்கை அழகினை கண்டு களித்து, புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீரானது விவசாயம் மற்றும் குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருவதுடன், பிளாஸ்டிக், மதுபாட்டில்கள். குப்பை உள்ளிட்ட கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளும் ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி மாசடைந்து வருகிறது. எனவே பொழிவு இழந்து வரும் ஏரியை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்