கொடைக்கானலில் ஆதித்தமிழர் பேரவையினர் சாலை மறியல்

கொடைக்கானலில் ஆதித்தமிழர் பேரவையினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-09-24 17:22 GMT

கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளரை சுகாதார ஆய்வாளர் ஒருவர் தகாத வார்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது, கடந்த வாரம் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சுகாதார ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழ் புலிகள், ஆதித்தமிழர் க‌ட்சியினை சேர்ந்த‌வர்கள் மூஞ்சிக்கல் பிர‌தான‌ சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகாதார ஆய்வாளரை கைது செய்யும் வரை போராட்டம் தொட‌ர்ந்து நடைபெறும் என தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்