கீழ வைப்பார் கிராமத்தில்மீனவர்களுக்கு நிதிஉதவி: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
கீழ வைப்பார் கிராமத்தில் மீனவர்களுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்
எட்டயபுரம்:
கீழவைப்பார் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியம், எக்லிண்டன், மூர்த்தி ஆகியோர் ஜெனிபர் என்பவரது படகில் மீன் பிடிக்கக் கடலுக்கு சென்றனர். அப்போது வீசிய பலத்த காற்றில் படகு விபத்துக்குள்ளானது. அவர்கள் 4 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அவர்களை ஏற்கனவே மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவர்களது வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும்ஜெனிபர் உள்ளிட்ட 4 பேரும், தங்களது படகு சேதமடைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதையடுத்து கீழவைப்பார் கிராமத்துக்கு சென்ற எம்.எல்.ஏ. படகு உரிமையாளர் ஜெனிபருக்கு ரூ.1¼ லட்சமும், திருமூர்த்தி, ஆரோக்கியம், எக்லிண்டன் ஆகியோருக்கு தலா ரூ.33 ஆயிரத்து 500-ம் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். தொடர்ந்து வைப்பார் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.