கெச்சிலாபுரம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவமுகாம்
கெச்சிலாபுரம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா காலங்காரப்பட்டி பஞ்சாயத்தில் கெச்சிலாபுரம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கோவில்பட்டி கால்நடைஉதவி இயக்குனர் விஜயாஸ்ரீ தலைமை தாங்கினார். இதில் 250 வெள்ளாடுகள், 460 செம்மறி ஆடுகள், 12 வெறிநோய் தடுப்பூசிகள், 360 கோழிகள் மற்றும் குடற்புழு நீக்கம், சினை பிடித்தல் மற்றும் நோய்வாய் பட்ட கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.