கெச்சிலாபுரம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

கெச்சிலாபுரம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-11-08 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு தாலுகா காலங்காரப்பட்டி பஞ்சாயத்தில் கெச்சிலாபுரம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கோவில்பட்டி கால்நடைஉதவி இயக்குனர் விஜயாஸ்ரீ தலைமை தாங்கினார். இதில் வானமுட்டி கால்நடை மருத்துவர் கனக லட்சுமி, கழுகுமலை கால்நடை உதவி மருத்துவர் ராஜ், கயத்தாறு கால்நடை மருத்துவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், 250 வெள்ளாடுகள், 460 செம்மறி ஆடுகள், 12 வெறிநோய் தடுப்பூசிகள், 360 கோழிகள் மற்றும் குடற்புழு நீக்கம், சினை பிடித்தல் மற்றும் நோய்வாய் பட்ட கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் காலாங்கரைப்பட்டி பஞ்சாயத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பகுதியில் விவசாயிகள் சிறப்பாக வளர்க்கப்பட்ட கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்களை உதவி இயக்குனர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்