கயத்தாறில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் எஸ்.வெள்ளத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் சுப்புராஜ், மாநில துணைத் தலைவர் நம்பிராஜன், மாநில செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கயத்தாறு வட்டார அமைப்பாளர் அழகுபாண்டியன், மற்றும் நகர வட்டார, மாவட்ட, கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.