கயத்தாறில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறில் தாலுகா அலுவலகம் முன்பு தேசிய விவசாய சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிவஞானபுரம், வாகைதாவூர், தளவாய்புரம் உள்பட பல்வேறு கிராமங்களில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் அத்துமீறி செயல்படுவதை கண்டித்தும், புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்வதாகவும், விளை நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் கயத்தாறு தாசில்தார் நாகராஜனிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதில் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ராஜ்குமார், கயத்தாறு ஒன்றிய தலைவர் அய்யாசாமி, ஒன்றிய இளைஞரணி தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.