கயத்தாறில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கயத்தாறில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-30 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் சிங்கராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தணிக்கையாளர் மகாராஜன். வட்டச் செயலாளர் சையத்மஷிப்லால், துணைச் செயலாளர் பரமன், ஆனந்தலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சிகளில் காலியாகவுள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தூய்மை பாரத இயக்க வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags:    

மேலும் செய்திகள்