கயத்தாறில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கயத்தாறில் வருகிற 20-ந் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
கயத்தாறு:
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கயத்தாறு மின்பிரிவு அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 20-ந் தேதி (செவ்வாய் கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் கலந்து கொண்டு மின் நுகர்வோர்களிடம் குறைகள் கேட்டு, நடவடிக்கை எடுக்க உள்ளார். அன்றைய தினம் இந்த கூட்டத்தில் சுற்றுவட்டார மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம், என தெரிவித்துள்ளார்.