கயத்தாறில்சாலையில் நடந்து சென்ற இளம்பெண்களிடம் சில்மிஷம்

கயத்தாறில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்களிடம் சில்மிஷம் செய்து வந்த வாலிபர் சிக்கினார்.

Update: 2023-08-04 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு தாலூகா அயிரவன்பட்டி கிராமத்தில் பாரதியார் நகரில் வசித்து வருபவர் சுப்பையா. இவரது மகன் விக்னேஷ் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஒருவாரமாக கயத்தாறு ஆஸ்பத்திரி சாலை மற்றும் வாரச் சந்தை சாலை வழியாக மதியம் ஆட்கள் இல்லாத நேரங்களில் செல்லும் பெண்களை மோட்டார் சைக்கிளில் சென்று சில்மிஷம் செய்து வந்துள்ளார். நேற்று வழக்கம் போல் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அவரை பெண்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை கயத்தாறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆண்டோணி தீலீப் வழக்கு பதிவு செய்து கைது ெசய்தார். பின்னர் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்