கயத்தாறில் 220 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு
கயத்தாறில் 220 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறில் அங்கன்வாடி மையம் சார்பில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைக்காப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கயத்தாறு அங்கன்வாடி வட்டார ஒருங்கிணைப்பாளர் தாஜ்ஹீன்நிஷாபேகம் தலைமை தாங்கினார். இவ்விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமிராஜதுரை குத்துவிளக்கு ஏற்றி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றச்செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன்,ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் திலகவதி, மணிமங்களும், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைக்காப்பு சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், பழத்துடன் மாலை அணிவித்து வளைகாப்பு செய்யப்பட்டது.