இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரியாப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-27 18:45 GMT

கரியாப்பட்டினம்:

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் சாருமடை கடை தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் வேதை வடக்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகையன், அம்பிகாபதி, பாலசுப்பிரமணியன், தங்க.சூர்யா, வெண்சங்கு, அல்லாபிச்சை, முருகானந்தம், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்