கண்டமனூரில்கதம்ப வண்டுகள் கடித்து 43 தொழிலாளர்கள் படுகாயம்

கண்டமனூரில் கதம்ப வண்டுகள் கடித்து 43 தொழிலாளா்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-09-23 18:45 GMT

 கண்டமனூரை அடுத்த ராமச்சந்திராபுரம் அருகே உள்ள அம்மாச்சியம்மன் கோவில் ஓடை பகுதியில் நேற்று 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெற்றது. கண்டமனூர் ஊராட்சியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள முட்புதரில் கதம்ப வண்டுகள் கூடு இருந்தது. இதை கவனிக்காத தொழிலாளர்கள் முட்புதரை அகற்றினர். அப்போது கூட்டில் இருந்த கதம்ப வண்டுகள் திடீரென கலைந்து பறந்தன.

அந்த வண்டுகள் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை விரட்டி, விரட்டி கடித்தன. இதனால் தொழிலாளர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். கதம்ப வண்டு கடித்ததில் 43 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு கண்டமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த கண்டமனூர் கிராமத்தைச் சேர்ந்த பூவநாதன், பாலம்மா, முனியம்மா, மச்சவல்லி ஆகிய 4 பேர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கதம்ப வண்டுகள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்