காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோவில் தேரோட்டம்
காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவிலில் பிரசித்தி பெற்ற சீதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா, குண்டம் விழா கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காஞ்சிக்கோவில் கிழக்கு ராஜ வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து தேேராட்டம் நடைபெற்றது. எம்.எல்.ஏக்கள் கே.சி.கருப்பணன் (பவானி), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வைஸ் ஆர்.பழனிசாமி, பெருந்துறை பேரூர் அ.தி.மு.க செயலாளர் வி.பி.கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ்.மணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.