கழுகுமலை பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்

கழுகுமலை பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-01-05 18:45 GMT

கழுகுமலை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை மற்றும் ரூ.1000 ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

இதையொட்டி கழுகுமலை பகுதியில் ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலைக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வாங்க டோக்கன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி தலைமை வகித்து டோக்கன் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து குமாரபுரம், துலூக்கர்பட்டி, கரடிகுளம் சி.ஆர்.காலனி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்கள் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கூட்டுறவு பண்டகசாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்