கடம்பாகுளத்தில் உபரிநீர் கால்வாய் தூர்வாரும் பணியை ஜூலை மாதத்தில் முடிக்க அமைச்சர் உத்தரவு

கடம்பாகுளத்தில் உபரிநீர் கால்வாய் தூர்வாரும் பணியை ஜூலை மாதத்தில் முடிக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-19 18:45 GMT

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை அருகே கடம்பாகுளத்தில் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணியை ஜூலை மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தூர்வாரும் பணி

தென்திருப்பேரை அடுத்துள்ள கடம்பாகுளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் மழை வெள்ள காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே வயல்வெளிகளில் ேதங்கி பயிர்கள் சேதமடைந்ததுடன், தாழ்வான பகுதிகளில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து நீர்ப்பாசன துறை சார்பில் ரூ. 34 கோடியில் உபரிநீர் கால்வாய் தூர்வாரவும், நான்கு குளங்களை சீரமைக்கவும், குளக்கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

அமைச்சர் ஆய்வு

இந்தப் பணிகளை நேற்று மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மழை காலத்துக்கு முன்பாக ஜூலை மாதத்திற்குள் இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும் தடுப்பணை பணிகள் தரமானதாக உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், தென்திருப்பேரை பஞ்சாயத்து கவுண்சிலர் ஆனந்த், நகர செயலாளர் முத்துவீர பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்