இனாம்மணியாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இனாம்மணியாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இனாம்மணியாச்சி:
விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி சந்திப்பில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் நடராஜன், வெள்ளைத்துரை பாண்டியன், சவுந்திரபாண்டியன், மாநில துணை தலைவர் நம்பிராஜன், மாநில பொருளாளர் ஏ.சுப்பாராஜ், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அவைத் தலைவர் வெங்கடசாமி, கயத்தாறு வட்டார தலைவர் கிருஷ்ணசாமி, மகளிரணியை சேர்ந்த வி.ரேணுகா தேவி, கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷ மிட்டனர்.