இலுப்பையூரணி கிராமத்தில்புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு பூமி பூஜை

இலுப்பையூரணி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு பூமி பூஜை நடந்தது.

Update: 2023-02-07 18:45 GMT

கோவில்பட்டி:

இலுப்பையூரணி பஞ்சாயத்து பூரணம்மாள் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தனம் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஆணையாளர் சீனிவாசன், பணி மேற் பார்வையாளர் வடிவேல் முருகன், பஞ்சாயத்து செயலாளர் ரத்தினகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்