தேனியில்சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

தேனியில் சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிவவரை போலீசார் பாராட்டினர்.

Update: 2023-03-31 18:45 GMT

தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது ஆட்டோவில் தேனி-பெரியகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு பணக்கட்டு கிடந்தது. அதை எடுத்த அவர், தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்திடம் அந்த பணக்கட்டை ஒப்படைத்தார். அதில் ரூ.40 ஆயிரம் இருந்தது. சாலையில் கிடந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் மணிகண்டனை போலீசார் பாராட்டினர். பணத்தை தவறவிட்டது யார்? என்று தெரியவில்லை. உரியவரிடம் அந்த பணம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்