தேனியில்சீமான் உருவபொம்மை எரிப்பு:தமிழ்ப்புலிகள் கட்சியினர் 13 பேர் கைது

தேனியில் சீமான் உருவபொம்மையை எரித்த தமிழ்ப்புலிகள் கட்சியினர் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-18 18:45 GMT

தேனி மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து தேனி நேரு சிலை சிக்னல் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் ஒரு சமுதாயத்தை சீமான் அவதூறாக பேசியதாக கூறியும், சீமானை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்த போது அக்கட்சியினர் சிலர் சீமானின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அந்த தீயை போலீசார் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்