தேனியில்நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாட்டு பிரிவு இயக்குனர் ஆய்வு

தேனியில் நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாட்டு பிரிவு இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-22 18:45 GMT

தேனி-பெரியகுளம் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை, நெடுஞ்சாலைத்துறையின் தரக்கட்டுப்பாட்டு பிரிவு இயக்குனர் கோதண்டராமன் நேற்று ஆய்வு செய்தார். புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் தரத்தை அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "மாவட்டத்தில் சாலை பராமரிப்பு பணிகள் நல்ல முறையில் மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரக்கன்றுகளின் வளர்ச்சி குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6 கிராமங்களை சேர்ந்த கிராம நல கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் தரக்கட்டுப்பாட்டு பிரிவு இயக்குனரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "தேனி-பூதிப்புரம் சாலையில் செல்லும் தண்ணீரை குழாய் மூலம் செல்லும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். இந்த சாலையை ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் இருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றம் செய்து, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்