தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: 30-ந்தேதி நடக்கிறது

தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.

Update: 2022-09-25 16:30 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி காலை 11 மணி அளவில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம். மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்