தேனியில்மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-05-19 18:45 GMT

தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, தேனி மின்திட்டக் கிளை தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மூக்கையா முன்னிலை வகித்து பேசினார். திட்டக் கிளை பொருளாளர் காமராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 1.12.2019-க்கு பிறகு பணிக்கு சேர்ந்த அனைத்து தரப்பு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்