தேனியில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி, சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். காலை 10 மணியளவில் தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 4.30 மணி வரை நடந்தது.