தேனியில் சாலை மறியல் செய்த மக்கள் மீது வழக்கு
தேனியில் சாலை மறியல் செய்த பொதுமக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த மகேஸ்வரகுமார் (வயது 55), கடந்த 7-ந்தேதி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, மகேஸ்வரகுமாரின் உறவினர்கள் மற்றும் அதே ஊரை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக அதே ஊரை சேர்ந்த 9 பெண்கள் உள்பட பெயர், முகவரி தெரிந்த 12 பேர் மற்றும் பெயர் தெரியாத பலர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அனுமதியின்றி ஒன்றுகூடி, போக்குவரத்தை மறித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.