கூடலூரில், மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கூடலூரில், மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

Update: 2023-07-16 18:45 GMT

கூடலூர்: கூடலூரில், மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

தொழிலாளி

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட சளிவயல் அருகே தாணிமட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் நடராஜ் (வயது 43). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கூடலூருக்கு சென்றார்.

பின்னர் மாலை 5 மணிக்கு தனது வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சளிவயல் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மாங்காய்கள் பறிக்க ஏறினார். அப்போது மரத்தின் கிளையில் இருந்தவாறு மாங்காய்களை பறிக்க முயன்றார். இந்த சமயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் நடராஜ் மரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

பலி

இந்த சமயத்தில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த நடராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்