கோபி நந்த கோகுலத்தில் மண்டல பூஜை நிறைவு விழா
கோபி நந்த கோகுலத்தில் மண்டலபூஜை நிறைவு விழா நடைபெற்றது
கோபி கோடீஸ்வரர் நகரில் உள்ள நந்த கோகுலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சகஸ்ர நாம பெருமாள், ராதிகா சமேத நந்தகோபால், ருக்மாயி சமேத பாண்டுரங்கன் ஆகிய தெய்வங்களுக்கு மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
இதை முன்னிட்டு சாந்தி ஹோமம், பரிகார ஹோமம், சுதர்சன ஹோமம் செய்யப்பட்டது. பின்னர் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.