கோம்பையில்மாட்டு தொழுவத்தில் புகுந்த நல்லபாம்பு
உத்தமபாளையம் அருகே மாட்டு தொழுவத்தில் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது.
உத்தமபாளையம் அருகே கோம்பை ரெங்கநாதபுரத்தில் பழைய சினிமா தியேட்டர் பின்புறத்தில் ஜான்சன் என்பவர் மாட்டு தொழுவம் அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மாட்டு தொழுவத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஜான்சனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபர்களான முத்துகிருஷ்ணன், மணிகண்ட பிரபு ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் வந்து தொழுவத்தில் பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீள நல்லபாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை அங்குள்ள வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.