கோபியில் கோவில்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு

பாதுகாப்பு

Update: 2022-09-23 19:30 GMT

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். இதைக்கண்டித்து கோபியில் அந்த அமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு கருதி கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பவளமலை, பச்சைமலை முருகன் கோவில்கள், கோபியில் உள்ள மசூதிகள், பா.ஜ.க. அலுவலகம், இந்து முன்னணி அலுவலகம், பெரியார் சிலை மற்றும் கோபி நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்