கோபியில் பறிமுதல் செய்யப்பட்ட 400 மது பாட்டில்கள் உடைத்து அழிப்பு
கோபியில் பறிமுதல் செய்யப்பட்ட 400 மது பாட்டில்கள் உடைத்து அழிக்கப்பட்டது.
கடத்தூர்
கோபி மதுவிலக்கு போலீசார் கோபி மற்றும் ஆசனூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்றதாக 69 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் 400 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கோபி கோட்ட கலால் அலுவலர் தியாகராஜன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் உடைத்து அழிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்புசாமி, வெள்ளியங்கிரி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.