கோபி பகுதியில் பலத்த காற்றுடன் மழை

கோபி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Update: 2023-09-20 21:54 GMT

கடத்தூர்

கோபியில் கடந்த சில தினங்களாகவே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதேபோல் நேற்றும் பகலில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணிநேரத்துக்கு மேல் மழை தொடர்ந்து பெய்தது.

இதேபோல் நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம், கரட்டூர், நாயக்கன்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சுமார் ½ மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின்தடையை சரிசெய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்