கோபியில் ரூ.4½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
கோபியில் ரூ.4½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்போனது.
கோபி
கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 149 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் (கிலோ) கொப்பரை தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.73.07-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.70.25-க்கும், சராசரி விலையாக ரூ.72.57-க்கும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 423-க்கு ஏலம்போனது.