குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
நாகர்கோவிலில், கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில், கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டம்
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 23). இவரை கஞ்சா விற்ற வழக்கில் வடசேரி போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இரணியல் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி செல்வன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று செல்வனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து செல்வனை வடசேரி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதேபோல் நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்த அஜித் என்ற அஜித்குமார் (27) என்பவர் மீதும் வடசேரி, இரணியல் ஆகிய போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு உள்ளது. அதைத்தொடர்ந்து அஜித்குமாரையும் வடசேரி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.