கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்புகிராம நிர்வாக அலுவலர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறில் தாலுகா அலுவலகம் முன்பு முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டி கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டார தலைவர் கருப்பசாமி, அரசு கிராம நிர்வாக உதவியாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரா. செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.