எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-09-30 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே பேரிலோவன்பட்டி நல்லழகு நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளிச் செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் செல்வக்குமார், ஆசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகள் 95 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் இயற்பியல் பிரிவிலிருந்து கேள்விகள் கேட்டு பதில் அளித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

எட்டயபுரம் அருகே வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 32 மாணவ-மாணவிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ரம்யா, பஞ்சாயத்து தலைவி ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியை ஷிபாஜினி தலைமை தாங்கினார். எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 172 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்