ஈரோட்டில் உள்ளஅரசு பள்ளிக்கூடங்களில் சிறார் படம் திரையிடப்பட்டது
ஈரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் சிறார் படம் திரையிட்டு காட்டப்பட்டன.
அரசு பள்ளிக்கூடங்களில் மாதம்தோறும் சிறார் திரைப்படங்கள் காண்பிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி இந்த (ஜூலை) மாதம் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி சிறார் திரைப்படமான ஈ.டி. திரையிடப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்று அறிக்கை அனுப்பியது.
அதன்படி நேற்று ஈரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் ஈ.டி. சிறார் படம் திரையிடப்பட்டது. ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவ-மாணவிகள் ஸ்மார்ட் வகுப்பறையில் சிறார் திரைப்படம் பார்த்தனர். தமிழில் எழுத்து வசனத்துடன் படம் திரையிடப்பட்டதால் காட்சிகளை புரிந்து கொண்டு மாணவ-மாணவிகள் ரசித்தனர்.