ஈரோடு மண்டல மின்வாரியத்தில்இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 13 பேருக்கு பணி நியமன ஆணை

13 பேருக்கு பணி நியமன ஆணை

Update: 2023-01-03 19:30 GMT

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியின்போது இறந்த 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான வாரிசு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்படி ஈரோடு மண்டலத்தில் 13 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது. நிகழ்ச்சியில் மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி கலந்துகொண்டு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இதில் ஈரோடு மின்பகிர்மான மண்டலத்துக்கு உள்பட்ட கோபி மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த 5 பேருக்கும், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த 3 பேருக்கும், சேலம் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த 5 பேருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்