ஈரோடு கிழக்கு தொகுதியில்அமைச்சர் சி.வி.மெய்யநாதன் கை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் சி.வி.மெய்யநாதன் கை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகாித்தார்.

Update: 2023-02-08 21:25 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன், நேற்று ஈரோடு காந்தி நகர், பூசாரி சென்னிமலை வீதி ஆகிய பகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியன், பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு, கவுன்சிலர் ரேவதி திருநாவுக்கரசு, அவல்பூந்துறை பேரூர் செயலாளர் சாமியப்பன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தனசேகர், மன்மோகன், தர்மலிங்கம், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜா, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பாலசந்திரசேகர், தங்கமணி, ஸ்ரீதேவி, அண்ணாதுரை, நைனா முகமது, சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்