ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பல இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. நேற்றும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
குறிப்பாக சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிக்கூடத்தில் இருந்து சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்ட மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். சென்னிமலை - வெள்ளோடு ரோட்டில் உள்ள சக்தி நகர் பகுதியில் தார் ரோடு தாழ்வாக இருப்பதால் அங்கு மழை வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை - 29
மொடக்குறிச்சி- – 20
ஈரோடு- – 17
பவானி- – 6
கவுந்தப்பாடி- – 3.4