ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 353 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 310 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 400 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 22 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 176 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.