பொறியியல்-கலை அறிவியல் கல்லூரிகளில்மகளிர் தினவிழா கொண்டாட்டம்

பொறியியல்-கலை அறிவியல் கல்லூரிகளில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-03-10 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

கொம்மடிக்கோட்டை

கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மூன்றாம் ஆண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவி செல்வராணி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் வேல் ராஜன் தலைமை தாங்கி பெண்களுக்கு பல்துறைப் புலமை வேண்டும் என்பதனை வலியுறுத்தி பேசினார். துணை முதல்வர் மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். மகளிர் மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜாஸ்மின் பொன்மேரி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். திசையன்விளை கனரா வங்கி மேலாளர் சவுந்தர்யா, அதிசயபுரம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் தங்கமேகலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். வணிகவியல் துறை மாணவி அபியா நன்றி கூறினார். விழாவை கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

சாயர்புரம்

சாயர்புரம் போப் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மகளிர் குழு ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறை இணை பேராசிரியருமான சாந்தினி கிரேஸ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை சாராள் தக்கர் கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியை பெல்சி நவஜோதி, தூத்துக்குடி ராசி மெடிக்கல் புஷ்பராஜ், ஜெகதா புஷ்பராஜ், சாயர்புரம் நகர பஞ்சாயத்து 15-வது வார்டு கவுன்சிலர் ஜெபதங்கம் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினா். டிஜிட்டல் பாலின சமத்துவத்துக்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி கணிதத்துறை உதவி பேராசிரியை ஜெனிட்டதேவநேசம் நன்றி கூறினார். விழாவில் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகந்தா வசந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

பிறைகுடியிருப்பு

பிறைகுடியிருப்பு சிவந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் மு.சிவந்தி முருகேசன் ஆலோசனையின் பெயரில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் வி. பாஸ்கர் ராஜ்பால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். கலை கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ஜெயக்குமாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்களுக்கு தேவையானது தன்னம்பிக்கை என்பதை, கவிதை வாயிலாக சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக அழகர் ஜூவல்லர்ஸ் ஆனந்தராஜ் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் சேதுபதி, சேது குற்றாலம், ராஜ்குமார், அரிஸ்டாட்டில், ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். விழாவினை நாட்டு நல பணி திட்டம் ஒருங்கிணைப்பாளர் சே. ஸ்டெல்லா மேரி, செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் மலர்மாலை மற்றும் பெண்களுக்கான குறை தீர்க்கும் துறை உறுப்பினர்கள் நடத்தினர். விழாவில் பேராசிரியர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இன்பேன்ட் சீசஸ் கல்லூரி

இன்பேன்ட்சீசஸ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை கல்லூரி செயலாளர் ரேஸ்லட் ஸ்டீபன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக சத்யா கலந்து கொண்டு பேசினார். கல்லூரி டீன் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

மாப்பிள்ளையூரணி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மகளிா் கூட்டமைப்பு சாா்பில் பொிய செல்வம் நகா் இ-சேவை மையம் மைதாணத்தில் மகளிா் தின விழா நடந்தது. விழாவுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ராதா தலைமை தாங்கினாா். மாப்பிள்ளையூரணி ஊராட்சி அளவிலான மகளிா் கூட்டமைப்பு தலைவி அந்தோணி பிரேமா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளர்களாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் உதவி மற்றும் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வசுந்தாி, அன்னசுந்தாி, தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலா் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்